
பழிவாங்கும் நோக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து ஒசூரில் திமுக சார்பாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக காவல் துறையினர் 6 பிரிவுகளின் கீழ் பொய்யான வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் ஒசூரில் ஏராளமான திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தவெக அரசு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் அரசியலை செய்வதை கண்டித்தும், காவல் துறையினரின் அராஜகத்தை கண்டித்தும் பேரணியாக சென்று, கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ள செய்தி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

