க்ரைம்
Trending

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

பழனி கோயில், பழனி ரயில் நிலையம், திண்டுக்கல் ரயில் நிலையம் ஆகியவைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

திண்டுக்கல், பழனி முருகன் கோவில், பழனி ரயில் நிலையம், திண்டுக்கல் ரயில் நிலையம் ஆகியவைக்கு செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் பழனி அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் எஸ்.பி தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட போது

வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட நபர் பழனியில் இருந்து ரயிலில் திண்டுக்கல்லுக்கு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர் தர்மபுரி மாவட்டம், நல்லாம்பள்ளியை சேர்ந்த மாது மகன் முனியப்பன்(24) என தெரியவந்துள்ளது.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button