
தென்காசி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் புளியங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அரசு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1680 கிலோ ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக ராஜபாளையம் பகுதியை சேர்ந்த வைரமுத்து என்பவர் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, வாகனத்தை ஓட்டி வந்த வைரமுத்து என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
