க்ரைம்
Trending

மத்திய அரசின் தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிலாளர் சங்கங்கள் சார்பில் திண்டுக்கல்லில் சிறை நிரப்பும் போராட்டம்.

மத்திய அரசின் தொழிலாளர் தொடர்பான நான்கு சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்றும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதனை நிறுத்திடவும், கார்ப்பரேட் ஆதரவு கொள்கையினை மாற்றிட வேண்டும் என்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ருபாய் 42,000 ஊதியம் வழங்கவேண்டும் என்றும், அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதிய பாதுகாப்பினை வழங்கவேண்டும் என்றும், நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு முறைகேட்டை தடுக்கவேண்டும் என்று கூறி CITU, LPF, AITUC, INTUC, HMC, AICCTU, UTUC, SKB, MLF ஆகிய அமைப்புகள் சார்பில் திண்டுக்கல் பெரியார் சிலை அருகில் உள்ள ஸ்டேட் பாங்க் முன்பு இன்று காலை 10 மணி அளவில் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்த காவல்துறையினர் வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button