
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோரின் 3 இருசக்கர வாகனங்கள் அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து, அருகில் உள்ள மகளி்ர் காவல் நிலையத்தில் இருந்த போலிசார் வந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து தீ யை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து டிஎஸ்பி சார்லஸ் அருகில் உள்ள காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். அதில் அதிகாலை நேரத்தில் ஒரு நபர் காவல் நிலையத்திற்கும் போக்குவரத்து காவல் நிலையத்திற்கும் 2 முறை நடந்து சென்றது பதிவாகி இருந்தது. தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இருசக்கர வாகனம் அருகே அமர்ந்து புகைப்பிடித்தபோது ஏற்பட்ட தீயால் வாகனங்கள் எரிந்ததாக வினோத் தெரிவித்ததார். இதை தொடர்ந்து வினோத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
