க்ரைம்

கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தந்தை, மகன் பலி

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கு அவர் வீட்டில் சொந்தமான கிணறு ஒன்று இருக்கிறது . அதனை சுத்தம் செய்ய திருவண்ணாமலையைச் சேர்ந்த ரவி மற்றும் அவரது மகன் அய்யனார் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் கிணற்றில் இருந்த வண்டல் மண்ணை அகற்றிய போது , ரவியை விஷவாயு தாக்கியதில் அவர் மயக்கமடைந்தார். தன் தந்தையை காப்பாற்ற கிணற்றுக்குள் இறங்கிய அய்யனாரையும் விஷவாயு தாக்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button