
தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கபிலன். இவர் இன்று மாலை வீட்டில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்ததார். அப்போது ஒன்றாம் கேட் பகுதியில் இருந்து சண்டிங்கிற்காக ரயில் நிலையம் நோக்கி ரயில் பின்னோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த கபிலன் திடீரென தண்டவாளத்தில் பாய்ந்து ரயில் முன்பு படுத்துள்ளார். இதில் ரயில் அவர் மீது ஏறியதில் கபிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், கபிலனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, கபிலன் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து அவரது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

