
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், இன்று நடைபெற இருந்த திமுகவின் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்தார். இதையடுத்து, இன்று மாலை நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழாவும் ஒத்திவைக்கப்படுவதாகவும், விழா நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் துரைமுருகன் கூறினார். இதை தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பது குறித்து துரைமுருகன் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
