க்ரைம்

கொட்டும் மழையில் விநாயகர் சிலை ஊர்வலம்- கொட்டும் மழையில் உற்சாக நடனமாடிய இளைஞர்கள்,இளம் பெண்கள் சிறுவர்கள் : ஊர்வலத்தில் ஊஞ்சலில் ஆடியபடி வந்த வேதநாயகம் விநாயகர்

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான உலுப்பகுடி, அண்ணாநகர், கோவில்பட்டி, கொண்டையம்பட்டி,அய்யாபட்டி, ஆவிச்சிபட்டி,நடுவனூர், சம,ஊராளிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆங்காங்கே பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.

இந்த சிலைகள் வாகனங்களில் மேளதாளம் முழங்க எடுத்துவரப்பட்டு நத்தம் கோவில்பட்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் பகுதிகளில் ஒன்று கூடினர். அங்கிருந்து 38 விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டு பேருந்து நிலையம், மூன்று லாந்தர், அவுட்டர் வழியாக அம்மன்குளம் சென்றடைந்தது. அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
விநாயகர் சிலையின் ஊர்வலத்தின் போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலத்தில் கலந்த கொண்டனர்.இளைஞர்களும் இளம் பெண்களும் சிறுவர்களும் பாடலுக்கு ஏற்றம் போல் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.

விநாயகர் சிலை ஊர்வல ஏற்பாடுகளை இந்து முன்னணியைச் சேர்ந்த நத்தம் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னதாக வட்டாட்சியர் டேனியல் பிரேம்குமார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நத்தம் காவல் ஆய்வாளர் பொன் குணசேகரன் உள்ளிட்ட சுமார் 200 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button