
தன்னைப் பற்றி அவதூறான செய்தி வெளியிட்டதாகக் கூறி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஸ்டாலின் தரப்பில், கட்சியின் பல்வேறு பிரிவுகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு, கட்சித் தலைவர் என்பதற்காக மட்டும் தன்னைப் பொறுப்பாக்க முடியாது என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் தரப்பு கோரியுள்ளது.
இதற்கிடையில், தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு அக்டோபர் 26-க்குள் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

