திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா பாளையம் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாண்ராயன்பட்டி அருகில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.
குப்பைகளை கிராமங்களில் சேகரித்து ஒரே இடத்தில் கொட்டுவதன் மூலம் குப்பைகள் பக்கத்தில் உள்ள விவசாய நிலங்களில் காற்றில் பறந்து சென்றுவிடுகிறது. இதனைால் விவசாயம் பாதிப்பு அடைகிறது. அவ்வப்போது மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை தீ வைத்து எரித்துவிடுகின்றனர். இதனால் காற்று மாசு ஏற்பட்டு அருகில் உள்ள மக்கள் மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய் தோற்று ஏற்படும் என அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்
அதே போன்று குப்பைகளில் 100-க்கணக்கான நாய்கள் சுற்றி வருகின்றன . இவைகள் அந்த பகுதில் உள்ள ஆடு, மாடு, கோழி மற்றும் மனிதர்களை கடித்து வருவதால் மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதுடன் கால்நடைகளும் இறப்பது அதிகரித்துள்ளது . இதனால் இந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படுகிறார்கள்.
எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது
