திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசவப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் அதிமுக பாசறை கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் கே. நாகராஜன், சிறுமலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் உமையாள் கனி ஆகியோர் தலைமையில் இவர்கள் கட்சியில் இணைந்தனர்.
தவெக தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல் குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறுமலை, தென்மலை, புதூர் உள்ளிட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த அதிமுக மற்றும் பிற கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி கட்சியில் இணைந்தனர்.
புதிய உறுப்பினர்களை வரவேற்ற நிர்மல் குமார், கட்சியின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்பட்டு, மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் மருதமுத்து,நிர்வாகி ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருத்தனர்.