க்ரைம்
Trending

கைது நடவடிக்கையின் போது திடீர் நெஞ்சுவலி – மருத்துவமனையில் சாதாரணமாக நடமாடும் வீடியோ வெளியாகி பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகணடனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக மருத்துவ பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் நெஞ்சுவலி என கூறியதால் உடனடியாக திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

மருத்துவமனை சிகிச்சை பிரிவு பகுதியில் அவர் சகஜமாக நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button