
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக காரில் குட்கா கடத்துவதாக மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஒட்டன்சத்திரம் DSP.கார்த்திகேயன் மேற்பார்வையில் ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன் தலைமையிலான போலீசார் ஒட்டன்சத்திரம் – தாராபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமாக வந்த நிறுத்தினர் அப்போது காரில் வந்த 2 பேர் இறங்கி தப்பி ஓடினார். போலீசார் காரை சோதனை மேற்கொண்ட போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி செல்வது தெரியவந்தது தொடர்ந்து போலீசார் காரில் இருந்த 435 கிலோ குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்

