
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாய்க்கனூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட A. வெள்ளோடு அருகில் உள்ள சிறுநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் சுற்றிவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது
தகவலின் அடிப்படையில் சுற்றுவட்டார பகுதி முழுவதும் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு சந்தேகத்திற்குட்பட்ட நபர்களை தீவிரமாக கண்காணித்ததில் இந்து நபர்கள் கொண்ட கும்பல் கஞ்சாவை விற்பனை செய்ய முயன்று வருவது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 20.5 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல்.
பிடிபட்ட ஐந்து நபர்களிடமும் விசாரணை நடத்திய அதிகாரிகள் நேற்று இரவு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
