

முதுமலை புலிகள் காப்பக கள் இயக்குனர் திரு.R.கிருபாசங்கர் IFS அவர்களது உத்தரவின்படியும், உதகை வனக்கோட்ட துணை இயக்குனர் (பொறுப்பு) திரு.R.வித்யாதர் IFS அவர்களது வழிகாட்டுதலின்படியும்,இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முக்குருத்தி வனச்சரக அலுவலர் திரு.செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் குந்தா வனச்சரக அலுவலர் திரு.சரவணன் தலைமையிலான வனக்குழுவினர், விவசாயிகள் & பொதுமக்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்ட, உதகை அரசு கலைக் கல்லூரி வன உயிரினப் பிரிவு விரிவுரையாளர் மற்றும் துறைத் தலைவர் முனைவர்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, விழிப்புணர்வு வீடியோக்கள், ஸ்லைடுகள் ஆகிவற்றை காண்பித்து, கரடிகள் தொடர்பான பிரச்சனைகள், அதன் பழக்க வழக்கங்கள், மனித-வன விலங்கு மோதலை தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகியன குறித்து விளக்கம் அளித்தார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, கரடிகள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் நடத்தியதற்காக. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், வனத்துறைக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.